ஆர்ஜே பாலாஜி அடுத்ததாக ‘பதாய் ஹோ’ எனுமா பாலிவுட் படத்தை ரீமேக் செய்து இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்ஜே-வாக இருந்து அதன் பின் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்ஜே பாலாஜி.எல்கேஜி படத்தில் ஹீரோவாக நடித்த பின்னர் நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் இணைந்து நடித்தது மட்டுமின்றி இயக்கவும் செய்திருந்தார்.வசூல் ரீதியாக படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது அவர் இயக்கும் அடுத்த படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது ஆர்ஜே பாலாஜி அடுத்ததாக ‘பதாய் ஹோ’ என்ற இந்தி திரைப்படத்தினை ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு முழுக்க காமெடி படமாக உருவாகி ரூ.220 கோடி வரை வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் தான் ‘பதாய் ஹோ’.தற்போது இந்த பாலிவுட் படத்தினை தமிழில் இயக்க உள்ளதாகவும்,அதில் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் பாலாஜி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் அவரது தந்தை கதாபாத்திரத்தில் சத்யராஜை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதனுடன் இந்த படத்திற்கு ‘வீட்ல விஷேசங்க’ என்று பெயரிட உள்ளதாகவும் , ஏற்கனவே இந்த டைட்டிலில் பாக்யராஜ் படமொன்று உள்ளதால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அறிவிக்க ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…