ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மண பெண்ணே படத்திற்கான மோஷன் போஸ்டரை நாளை மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் வெளியீடவுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு தருண் இயக்குனர் பாஸ்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் நடிகை ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பெல்லி சூப்புலு இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தை தற்போது தமிழில் இதற்கு ஓ மண பெண்ணே என்ற டைட்டில் வைத்து இயக்குனர் கார்த்திக் சுந்தர் ரீமேக் செய்கிறார். இவர் இயக்குனர் ஏ எல் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
இந்த தமிழ் ரீமேக்கில் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு படத்திலிருந்து படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மட்டும் வெளியிட்டனர்.
அதற்குப் பின்னர் எந்த ஒரு அப்டேட்டும் படக்குழுவினர் விடாமல் இருந்ததை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்திற்கான மோஷன் போஸ்டரை நாளை மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் வெளியிடுவார் என்று ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…