நாசா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐஎஸ்எஸ்) நார்த்ரோப் க்ரம்மனின் சிக்னஸ் என்ற விண்கலத்தை நேற்று மாலை வர்ஜினியாவின் வாலோப்ஸ் விமான நிலையத்திலிருந்து ஏவியது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான கருவிகளை கொண்டு செல்லும் சிக்னஸ் என்ற விண்கலம் கடந்த வியாழனன்று வர்ஜினியாவின் வாலோப்ஸ் தீவிலிருந்து புறப்பட இருந்தது. ஆனால், விண்கலம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்கலம் ஏவப்படும் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
பின்னர், அந்த கோளாறு சரிசெய்யப்பட்டு நேற்று மாலை நார்த்ரோப் க்ரம்மனின் சிக்னஸ் விண்கலம் ஏவப்பட்டது. ஏவப்பட்ட விண்கலத்திற்கு விண்வெளியில் நுழைந்த முதல் இந்தியப் பெண், விண்வெளி வீரர் கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டது.
விண்வெளி வீரர் கல்பனா சாவ்லாவின் பெயரால் ஏவப்பட்ட வணிக சரக்கு விண்கலமான நார்த்ரோப் க்ரூமன் சிக்னஸ் விண்வெளிக்கு 360 டிகிரி கேமராவையும், அங்கு வளர முள்ளங்கி விதைகளையும் சென்று கொண்டுள்ளது. மேலும், புவியீர்ப்பு விசை முற்றிலும் இல்லாத கழிவறை ஒன்றை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாசாவால், தற்போது பரிசோதனை நோக்கில் அனுப்பப்பட்டுள்ள இந்த கழிவறை ரூ.170 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. 8,000 பவுண்டு சரக்குடன் கொண்டு சென்ற இந்த விண்கலம் 2 நாள் பயணத்திற்கு பின் திங்கட்கிழமை சர்வதேச வின்வெளி நிலையத்தை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம்…
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…