ரஷ்யா, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 36 நாடுகளின் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.
கடந்த 5 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து,தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.எனினும்,பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில், அண்டை நாடான பெலாரஸ்-இல் சில நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நேற்று ரஷ்யா விடுத்த அழைப்பை முதலில் நிராகரித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,அதை இன்று ஏற்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து இன்று மதியம் இருநாடுகளுக்கும் இடைய பேச்சுவார்த்தை நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில், உடனடியாக போர் நிறுத்த வேண்டும், அதேபோல ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற உத்தரவிட வேண்டும் என உக்ரைன் தரப்பில் வலியுறுத்தியிருந்தது. ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்து, ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யா, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 36 நாடுகளின் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அந்நாடுகளுக்கு மீது ரஷ்யா பதில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…