இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும்படி சதக் 2 போஸ்ட்ர் இருந்ததை அடுத்து மகேஷ் பட், முகேஷ் பட் மற்றும் ஆலியா பட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகேஷ் பட் இயக்கி முகேஷ் பட்டுடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘சடக் 2’. இந்த படத்தில் பூஜா பட், ஆலியா பட், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் போஸ்ட்ர் ஒன்று வெளியாகியதை அடுத்து இந்துக்களை அவமரியாதை செய்வதாக கூறி முகேஷ் பட், மகேஷ் பட் மற்றும் ஆலியா பட் மீது வழக்கு பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள வக்கீல் வினய் பாண்டே ஐபிசி பிரிவுகளான வேண்டுமென்றே மத உணர்வுகளை மீறுவதால் 295ஏ – ன் கீழும், கிரிமினல் சதி என்பதால் 120பி-ன் கீழும் வழக்கு பதிவு செய்து மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சதக்2 படத்தின் போஸ்டரில் கைலாஷ் மன்சரோவரர் மலையை பயன்படுத்தியுள்ளனர். அந்த மலை பகவான் ஷங்கரின் தங்கமிடமாகும்.
புனிதமான மலையை பயன்படுத்தி இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளனர். எனவே முகேஷ் பட், மகேஷ் பட் மற்றும் ஆலியா பட் ஆகியோரின் ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டான சவுரப் பாண்டே செப்டம்பர் 8ம் தேதி விசாரணைக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…