பிரேம்ஜி மற்றும் ரேஷ்மா பசுபதி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்ட்ரை மாதவன் அவர்கள் வெளியிட்டுள்ளார்
கடந்த 2017ம் ஆண்டு ‘ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா. இந்த படம் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பல விருதுகளையும் அள்ளி குவித்தது. தற்போது இவர் தனது அடுத்த படத்தினை குறித்த டைட்டிலை வெளியிட்டுள்ளார். ‘சத்திய சோதனை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலமான ரேஷ்மா பசுபதி நடிக்கவுள்ளார்.
சத்திய சோதனை என்பது தேசதந்தை மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை குறிப்பிடும் நூலாகும். இந்த டைட்டிலுடன் உருவாகும் இந்த படமும் நகைச்சுவையுடன் நல்ல சமூக கருத்துக்களையும் கூறும் படமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். டைட்டிலுடன் கூடிய போஸ்ட்ரை நடிகர் மாதவன் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…