இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த சீமான்!

Published by
லீனா

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த சீமான்.

இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பூந்தமல்லி அடுத்து நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி  சினிமா தளத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கு, செட் அமைக்கும்  பணி நடைபெற்று வந்தது. இந்த செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளதாகும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இவர்களது மரணத்திற்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ள நிலையில், சீமான் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இந்தியன் 2’ படப்பிடிப்புத்தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும், மனவேதனையையும் தருகிறது. மூவரது இழப்பினால் வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், படக்குழுவினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கேற்கிறேன்.

இவ்விபத்தில் தனது மருமகன் கிருஷ்ணாவை இழந்து நிற்கும் மதிப்பிற்குரிய கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்களுக்கு என் ஆறுதல்கள். இனிவரும் காலங்களில் படப்பிடிப்புத்தளங்களில் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் உச்சகட்ட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதுவே கடைசி விபத்தாக இருக்க வேண்டும் என்றும் பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…

6 minutes ago

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

33 minutes ago

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

2 hours ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

4 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

5 hours ago