அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து அவரது சகோதரி வெளியிட்ட ரகசிய பதிவு!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து அவரது சகோதரி வெளியிட்ட ரகசிய பதிவு.
அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ட்ரம்பின் சகோதரி மேரி ட்ரம்ப், ட்ரம்பின் குடியேற்ற கொள்கை குறித்து விமர்சித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ‘அதிபர் ட்ரம்பிற்கு கொள்கை என்று எதுவுமே இல்லை. அவர் கொடூரமானவர். அவர் பொய்யரும் கூட.’ என அவரது ரகசிய பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த ரகசிய பதிவு, ட்ரம்பின் மருமகள் மூலம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மேரி ட்ரம்ப், உலகின் கொடூரமான மனிதனை என் குடும்பம் எப்படி உருவாக்கியது என ஒரு புத்தகத்தை கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தார். இந்த புத்தகம் குறித்து வெள்ளை மாளிகை ‘பொய்களின் புத்தகம்’ என தெரிவித்திருந்தது.
மேரி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அந்த ரகசிய பதிவில், தனக்காக கல்லூரி நுழைவு தேர்வை எழுத அதிபர் ஒருவருக்கு பணம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு குறித்து அதிபர் ட்ரம்போ, வெள்ளை மாளிகையோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025