பிஞ்சுகளைத் தொட்டால் நடுத்தெருவில் தூக்கு..வந்தது சட்டம்.!

குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்பவர்களை பொதுவெளியில் தூக்கிடுவது தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பவர்களை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடும் சட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப் பட்டுள்ளது.அண்மைக்காலமாகவே அந்நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக பெருகி வரும் குற்றங்களுக்கு எதிராக கடும் தண்டனையை அரசு வழங்கவேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனையடுத்து அந்நாட்டு நாளுமன்றத்தில் சட்டம் முன்பொழியப்பட்டது.இந்நிலையில் புதிய சட்டத் திருத்தம் தொடர்பாகப் பேசிய அந்நாட்டு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அலி முகமது கான் கூறுகையில் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்பவர்களை பொது வெளியில் தூக்கிலிடுவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறினார்.இச்சட்டமானது அந்நாட்டு நாடளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது குறிட்டத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025