பிரபல நடிகரின் அடுத்த படத்தில் சாந்தனு.! வாக்குறுதி அளித்த பிரபலம்.!

தற்போது பாக்கியராஜ் அவர்களின் ஹிட் படமான முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக் உரிமையை சசிகுமார் வாங்கியதும், விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நடிகரும், இயக்குநருமான பாக்கியராஜ் அவர்களின் மகனான சாந்தனு அவர்களை நாம் பல கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம். கடைசியாக வானம் கொட்டட்டும் படத்தில் நடித்திருந்தார் தற்போது கூட விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனையடுத்து கசடதபற, ராவண கூட்டம் உள்ளிட்ட படங்களை தனது கைவசம் வைத்துள்ளாராம் சாந்தனு.
இந்த நிலையில் தற்போது நடிகர் மற்றும் இயக்குநரான சசிகுமாரின் அடுத்த படத்தில் சாந்தனுவிற்கு ஒரு முக்கிய கதாபாத்திரத்தை அளிப்பதாக வாக்குறுதி கொடுத்ததாக தெரிய வந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் படத்தில் ஜெய் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் சாந்தனு தான் தேர்வு செய்யப்பட்டாராம். ஆனால் சில காரணங்களால் நடிக்காமல் போய் விட்டது. தற்போது பாக்கியராஜ் அவர்களின் ஹிட் படமான முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக் உரிமையை சசிகுமார் வாங்கியதும், விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
July 7, 2025
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!
July 7, 2025