அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.அந்த வகையில்,நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளின் சுரங்க ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் நேற்று பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 13-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்,இது தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே,துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் கட்டடப் பணியில் ஈடுபடுவோர் போன்று ஆரஞ்சு நிற உடை அணிந்திருந்ததாகவும், முகக்கவசமும் அணிந்திருந்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து தப்பி ஓடிய அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.இந்நிலையில்,துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் ஃபிராங்க் ஜேம்ஸ் என்று அடையாளம் கண்டுள்ளதாக நியூயார்க் காவல் துறை (NYPD) தெரிவித்துள்ளது.
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…