சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் வதந்தி என்று மனோஜ் விளக்கமளித்துள்ளார்.
பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’. இளையராஜா இசையமைத்த திரில்லர் கலந்த இந்த படம் அந்த காலத்திலையே அனைவரையும் மிரள வைத்து பெரும் வெற்றியை பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியானது.
ஆம் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை பாரதிராஜாவின் மகனான மனோஜ் இயக்கவுள்ளதாகவும், கமல் நடித்த கதாபாத்திரத்தில் சிம்பு அவர்களை நடிக்க வைக்க உள்ளதாகவும்,கீர்த்தி சுரேஷை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. தற்போது இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பாரதிராஜாவின் மகனும் , நடிகருமான மனோஜ் விளக்கமளித்துள்ளார்.
அதில் சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் சிகப்பு ரோஜாக்கள் – 2 குறித்து வெளியாகியுள்ள செய்திகள் அனைத்தும் வதந்தி என்றும், ஒருவேளை படத்தை இயக்குவது குறித்து யோசித்தால் கண்டிப்பாக நானும், எனது அப்பாவும் இணைந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றும் கூறியுள்ளார். இதிலிருந்து சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக வெளியான தகவல்கள் வதந்தி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…