நதிகளிலே நீராடும் சூரியன் தலைப்பை படக்குழு மாற்ற உள்ளதாகவும் புதிய டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று 12.15க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் அழகான காதல் கதைகளை இசையுடன் சேர்ந்து ரசிகர்களுக்கு எப்போதும் ரசிக்கும்படி படங்களை இயக்குவதில் வல்லவர் கெளதம் மேனன். இவரது இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. அதனை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் அச்சம் என்பது மடமையடா திரைப்படம் வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது.
மேற்கண்ட இரண்டு படங்களுக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அற்புதமான பாடல்களை கொடுத்திருந்தார். இதற்கடுத்தாக சிலம்பரசன் – கெளதம் மேனன் – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் நதிகளிலே நீராடும் சூரியன் எனும் திரைப்படம் உருவாவதாக அறிவிப்பு வெளியானது. இந்த பட அறிவிப்பு வெளியாகி வெகுநாட்கள் ஆகியும் படத்திற்கான ஷூட்டிங் மற்றும் மற்ற வேலைகள் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடிப்பதாக தகவல்கள் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில் இப்படத்தின் தலைப்பான நதிகளிலே நீராடும் சூரியன் எனும் தலைப்பை படக்குழு மாற்ற உள்ளதாகவும் புதிய டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று 12.15க்கு வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்துள்ளனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…