சிம்பு அடுத்ததாக சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் சிம்பு நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.இந்த திரைப்படம்குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதனை தொடர்ந்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.இதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் மப்டி பட ரீமேக்கான பத்து தல படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.அதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கவுள்ளார்.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சிம்பு அடுத்ததாக மாநாடு பட தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுரேஷ் காமாட்சி ஏற்கனவே ‘மிக மிக அவசரம் ‘ எனும் படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது . தற்போது இவர் இரண்டாவதாக இயக்கும் படமானது பிரபல எழுத்தாளர் ம.காமுத்துரை எழுதிய ‘முற்றாத இரவொன்றில்’ என்கிற நாவலைத் தழுவி உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.அதற்கான உரிமையை சுரேஷ் காமாட்சி காமுத்துரை அவர்களிடமிருந்து பெற்று கொண்டதாகவும் கூறப்படுகிறது.சுரேஷ் காமாட்சி அடுத்ததாக தயாரித்து இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…