தளபதி 65 படத்திற்கு முதல் பாடலை எழுதும் சிவகார்த்திகேயன்.?

விஜய் நடிப்பில் உருவவுள்ள தளபதி 65 படத்தின் முதல் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று சூப்பரான வசூல் செய்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தனது 65 வது படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற் கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் 2 வது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சிவகார்திகேயனிடம் கேட்டதாகவும் ஆனால், சிவகார்த்திகேயன் டான் படத்தில் கமிட் ஆன காரணத்தால் நடிக்கமுடியாது என்று குறிவிட்டதாகக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தளபதி 65 படத்தின் முதல் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் யூடியூபில் நல்ல சாதனையை படைத்தது வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025