நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்திற்கான தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர் , அயலான் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாக தயாராகவுள்ளது.
இதில் டாக்டர் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோஸ் அறிவித்திருந்தது.
இதைபோல் இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அயலான்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத்தி சிங் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறு விறுவென நடந்து வருகிறது.
இதனையடுத்து தற்போது அட்லீயின் உதவி இயக்குனரான சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் “டான்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் அட்லீயின் உதவி இயக்குனர் அசோக் என்பவரது இயக்கத்தில் தந்தை – மகன் என இரு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தையும் கேஜெஆர்ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் படத்திற்கு சிங்கப்பாதை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…
சென்னை : தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இடமாற்றம் உத்தரவை…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை சென்னை அடையாறு…