கமல்ஹாசன் முன்னிலையில் பாடலாசிரியர் சினேகன் – நடிகை கன்னிகாவின் திருமணம் நடைபெற்றுள்ளது.
பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் இன்று நடைபெற்றுள்ளது.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைவரது நலன் கருதி மிக எளிமையாகவும், தனிமனித இடைவெளியோடும், அரசு விதிமுறைகளோடும் சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண விழாவில், இயக்குநர் பாரதிராஜா உள்பட திரையுலக பிரமுகர்கள் மணமக்களை நேரில் வாழ்த்தியுள்ளனர். மேலும், ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றார்கள்.
பாடலாசிரியர் சினேகன் தமிழில் 700-மேற்பட்ட படங்களில் 2500கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும், கோமாளி, உயர்திரு 420, ராஜராஜ சோழனனின் போர்வாள் , பூமிவீரன், யோகி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதைபோல், நடிகை கன்னிகா ரவி சரித்திரம் பேசு, சத்திரபதி, தேவராட்டம், அடுத்த சாட்டை ஆகிய படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…