இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூரியா நடிப்பில் உருவாகி வருகின்ற படம் சூரரைப் போற்று. இந்த படம் இந்தியா நாட்டின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றையை மையப்படுத்தி உருவாகி வருகின்றது.படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். சூர்யாவின் 2டி என்டர்டெயின் மென்ட் நிறுவனம் மற்றும் சிக்யா நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்து உள்ளது.
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷனுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது. படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ஆனது சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
டீசர் எப்பொழுது வெளியாகும் என்று ரசிகர்கள் படக்குழுவிடம் அப்டேட் கேட்டு வந்த நிலையில் படக்குழு ஜன.,7 தேதி படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவித்து உள்ளது. புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கும் படக்குழு ஜன.,7 அன்று மாலை 5 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. படக்குழுவின் இந்த அறிவிப்பு சூர்யாவின் ரசிகர்களுக்கு மற்றற்ற மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…