விஷால் நடித்து முடித்துள்ள ‘சக்ரா’ படத்தின் டிரைலர் வரும் ஜூன் 27ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்றும் ,அவற்றுள் மலையாள மொழி ட்ரைலர் சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்களால் வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று ‘சக்ரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கிற்கு முன்பு முடிவடைந்தது. இந்த படத்தை எம். எஸ். ஆனந்த் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தில் ரெஜினா கெசன்ட்ரா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகியாக நடிக்கின்றனர். மேலும் அவர்களுடன் ரோபோ சங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. சமீபத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தனர்.அண்மையில் இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டிரைலர் புரோமோவை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் சக்ரா படத்தின் டிரைலரை வரும் ஜூன் 27ம் தேதி சனிக்கிழமை அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. தற்போது அந்த படத்தின் மலையாள டிரைலரை மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மோகன்லால் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டரில் பக்கத்தில் அறிவித்துள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…