தனது நெகிழ்ச்சியான பேச்சால் சூர்யாவை கண்ணீர் விட வைத்த கல்லூரி மாணவி.!

- அகரம் அறக்கட்டளை சார்பில் வித்தியாசம் தான் அழகு உலகம் பிறந்தது நமக்காக என்ற இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது.
- மேடையில் மாணவி ஒருவர் தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்களையும், குடும்ப சூழ்நிலையையும் சோகத்துடன் பேசினார். இதைக் கேட்ட நடிகர் சூர்யா மேடையில் கண்கலங்கி ஆறுதல் கூறினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சூரைப்போற்று படத்தில் நடித்து வருகிறார். அதனின் முதல் பார்வை அண்மையில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நடிப்பு மட்டுமில்லாமல் நடிப்பைத் தாண்டி விவசாயிகளுக்கு உதவுவது, கல்வி கற்க முடியாத மாணவர்களுக்கு அகரம் அறக்கட்டளை மூலம் அடையாளம் கண்டு அவர்களை படிக்க வைப்பது உள்ளிட்ட சமூக நலப்பணியாற்றி வருகிறார். சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்த அவரது பேச்சு அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரது மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அகரம் அறக்கட்டளை சார்பில் வித்தியாசம் தான் அழகு உலகம் பிறந்தது நமக்காக என்ற இரண்டு புத்தக வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ், சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்களையும், குடும்ப சூழ்நிலையையும் சோகத்துடன் பேசினார். இதைக் கேட்ட நடிகர் சூர்யா மேடையில் கண்கலங்கி கேட்டுக்கொண்டிருந்த சூர்யா திடீரென எழுந்து அந்த பெண்ணிடம் சென்று மாணவிக்கு தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வு அங்கு வந்திருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025