தனது நெகிழ்ச்சியான பேச்சால் சூர்யாவை கண்ணீர் விட வைத்த கல்லூரி மாணவி.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • அகரம் அறக்கட்டளை சார்பில் வித்தியாசம் தான் அழகு உலகம் பிறந்தது நமக்காக என்ற இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது.
  • மேடையில் மாணவி ஒருவர் தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்களையும், குடும்ப சூழ்நிலையையும் சோகத்துடன் பேசினார். இதைக் கேட்ட நடிகர் சூர்யா மேடையில் கண்கலங்கி ஆறுதல் கூறினார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சூரைப்போற்று படத்தில் நடித்து வருகிறார். அதனின் முதல் பார்வை அண்மையில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நடிப்பு மட்டுமில்லாமல் நடிப்பைத் தாண்டி விவசாயிகளுக்கு உதவுவது, கல்வி கற்க முடியாத மாணவர்களுக்கு அகரம் அறக்கட்டளை மூலம் அடையாளம் கண்டு அவர்களை படிக்க வைப்பது உள்ளிட்ட சமூக நலப்பணியாற்றி வருகிறார். சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்த அவரது பேச்சு அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரது மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அகரம் அறக்கட்டளை சார்பில் வித்தியாசம் தான் அழகு உலகம் பிறந்தது நமக்காக என்ற இரண்டு புத்தக வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ், சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்களையும், குடும்ப சூழ்நிலையையும் சோகத்துடன் பேசினார். இதைக் கேட்ட நடிகர் சூர்யா மேடையில் கண்கலங்கி கேட்டுக்கொண்டிருந்த சூர்யா திடீரென எழுந்து அந்த பெண்ணிடம் சென்று மாணவிக்கு தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வு அங்கு வந்திருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago