மறைந்த சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக பிரபல மேலாளரான ரேஷ்மா ஷெட்டியிடம் சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை மும்பை போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் .
இந்நிலையில், கடந்த ஜூன் 14 அன்று இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் பலரும் பாலிவுட் திரையுலகமே அவரின் மரணத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக சுஷாந்த் சிங் குறித்த செய்திகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் அவரது மரணத்திற்கு காரணம் என்ன என்பதை அறிய போலீசார் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது திறமை மேலாளரான ரேஷ்மா ஷெட்டியிடம், கடந்த வெள்ளிக்கிழமை காவல்நிலையத்தில் வைத்து சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை விசாரணை நடைப்பெற்றது. அவரது அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதனை குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ரேஷ்மா ஷெட்டி பாலிவுட்டின் பல முன்னணி பிரபலங்களான அக்ஷய் குமார், கத்ரீனா கைப், ஆலியா பட் உள்ளிட்டோருக்கு மேலாளராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை மும்பை காவல்துறையினர், சுஷாந்த் சிங்கின் நண்பர்கள், உறவினர்கள் உட்பட 35-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கைகளை பதிவு செய்துள்ளனர். மேலும் அவரது மறைவு குறித்து விசாரிக்க சிபிஐ-யிடம் வழக்கை கொடுக்குமாறு நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…