காதல் மன்னன் படத்தில் நடித்த மானு, தல அஜித்தை சிறந்த மனிதர், பலருக்கும் உதவும் மனம் கொண்டவர் என்று புகழ்ந்துள்ளார்.
கடந்த 1998ல் சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் மன்னன். அஜித் அவர்களின் திரைப்பயணத்தை மாற்றியமைத்த படங்களில் ஒன்று காதல் மன்னன் என்றே கூறலாம். இன்றும் ரசிகர்கள் இந்த படத்தினை ஆர்வமுடன் கண்டு ரசிப்பார்கள். பரத்வாஜ் இசையமைப்பில் விவேக், எம்எஸ்வி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். மேலும் ஹீரோயினாக திலோத்தமா என்ற கதாபாத்திரத்தில் மானு என்ற நடிகை நடித்திருப்பார்.
சமீபத்தில் மானு பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது முதல் படமான காதல் மன்னன் குறித்தும், தல அஜித் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் முதல் படமே எனக்கு அருமையான அனுபவமாக இருந்ததாகவும், இன்றும் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடபடுவதற்கு முக்கிய காரணம் காதல் மன்னன் படக்குழுவினரின் உழைப்பு மட்டுமே என்று கூறியுள்ளார். மேலும் தல அஜித் திறமை வாய்ந்த நடிகரும், சிம்பிளான மனிதரும் கூட. மேலும் நடிப்பு , அழகிய தோற்றம் என்பதனை தவிர்த்து சிறந்த மனிதர், பலருக்கும் உதவும் நல்ல மனமுடையவர், மாய சக்தி உடையவர் என்று புகழ்ந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…