குடமுழுக்கு கண்ட பின்னும் தஞ்சையில் குவியும் மக்கள்

Published by
kavitha

உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் தஞ்சை பெரியகோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டினான். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு மட்டும் அல்லாது இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

23 ஆண்டு கழித்து தற்போது இக்கோவிலுக்கு குடமுழுக்கு விழா கடந்த 5ந்தேதி நடைபெற்றது. இதற்காக கடந்த 1ந்தேதி யாகசாலை பூஜையானது தொடங்கி குடமுழுக்கு நடைபெற்ற நாள் வரை 13 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளார்கள். குடமுழுக்கு நடைபெற்ற  மறுநாளே  மண்டலாபிஷேக பூஜை தொடங்கியது.இந்த மண்டலாபிஷேக பூஜை வருகிற 29ந்தேதியன்று  நிறைவடைகிறது.

இந்நிலையில் குடமுழுக்கு நடைபெற்ற பின்னரும் கோவிலுக்கு பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை அதிக அளவில் உள்ளது. காலைமுதலே பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

13 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

53 minutes ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

1 hour ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

1 hour ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

3 hours ago