#Breaking:நடிகர் சூர்யாவின் மனு தள்ளுபடி -உயர்நீதிமன்றம்..!

வருமான வரிக்கு வட்டி கட்டுவதில் விலக்கு கேட்டது தொடர்பான நடிகர் சூர்யாவின் மனுவை சென்னைஉயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நடிகர் சூர்யாவிடம் 2007-2008, 2008-2009 நிதி ஆண்டுக்கான வருமான வரி ரூ.3.11 கோடி செலுத்த வருமான வரித்துறை முன்னதாக உத்தரவு பிறப்பித்தது.ஆனால்,3 வருடங்களுக்கு பிறகு வருமான வரி கணக்கிட்டு வசூலிக்கப்பட்டதால் வட்டியை வசூலிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சூர்யா வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில்,வருமான வரிக்கு வட்டி கட்டுவதில் விலக்கு கேட்ட நடிகர் சூர்யாவின் மனு தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.முன்னதாக, வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தராததால்,மனுவை தள்ளுபடி செய்ய வருமான வரித்துறை வாதம் செய்த நிலையில்,நடிகர் சூர்யாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025