ரிஷிகபூரின் மறைவு குறித்து மகளின் நெஞ்சை தொடும் பதிவு..!

Default Image

ரிஷிகபூரின் மறைவு குறித்து அவரது மகள் ரித்திமா கபூர் தொடும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர், இவரது தந்தையான ராஜ் கபூர் இயக்கிய ‘மேரா நாம் ஜோக்கர்’ படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமானார். இவர் கடைசியாக ‘தி பாடி’ படத்தில் இம்ரான் ஹாஷ்மியுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மூச்சு திணறல் காரணமாக ஏப்ரல் 29அன்று மும்பையில் உள்ள சர். ஹெச். என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் பாலிவுட் இளம் நடிகரான ரன்பீர் கபூரின் தந்தையாவார். இவர் ஏற்கனவே புற்று நோய்க்கு நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இறுதி சடங்கில் மகளான ரித்திமா கபூரால் பங்கேற்க முடியவில்லை. இவரது மறைவுக்கு பல பாலிவுட் மற்றும் கோலிவுட் நடிகர்கள் உட்பட பலர் பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்திருந்தனர்.

ஆம் டெல்லியில் வசித்து வரும் ரித்திமா ஊரடங்கு காரணமாக தனது தந்தையின் இறுதி சடங்கில் அவரால் பங்கேற்க இயலவில்லை. அவர் தனது தந்தையின் இறுதி சடங்கை வீடியோ கால் மூலம் கண்டு கண்ணீர் வடித்தார். இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்பா ஐ லவ் யூ, நான் எப்போதும் உங்களை நேசிப்பேன். என் வலிமையான போர் வீரரின் ஆன்மா சாந்தியடையட்டும். நான் எப்போதும் உங்கள் மிஸ் செய்வேன். தினமும் உங்களது  வீடியோ காலை மிஸ் செய்வேன். நான் உங்களை அனுப்பி வைக்க அங்கே இருந்திருக்க வேண்டும், மீண்டும் சந்திக்கும் வரை ஐ லவ் யூ அப்பா, உங்கள் முஷ்க் என்றென்றும் என்று பதிவிட்டு ரிஷிகபூருடன் அவர் இணைந்து இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் செம்ம வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
Mr. Subramanian
csk dhoni
Chennai Super Kings vs Punjab Kings ipl
retro
Chennai Super Kings vs Punjab Kings