அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் மிகப்பெரும் சவாலாக இருக்கக்கூடும் என தொற்று நோய் நிபுணர் அந்தோணி ஃபாசி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் ஏற்பட்ட கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டு நிலையில், இந்த கொரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா வகை கொரோனா மிக வேகமாக பரவி வந்தது. இந்த வகை வைரஸால் இந்தியாவில் மூன்றாம் அலை உருவாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் உருமாற்றம் அடைந்த இந்த வைரஸ், இங்கிலாந்து அமெரிக்கா உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் பரவி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், உலக அளவில் இந்த டெல்டா வகை வைரஸ் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க புற்றுநோய் மருத்துவர் அந்தோணி ஃபாசி அவர்கள் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா காரணமாக கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என கூறியுள்ளார்.
மேலும், இந்த டெல்டா வகை கொரோனா மிக வேகமாக பரவக்கூடியதுடன் அதிக வீரியம் கொண்டது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது அமெரிக்காவில் செலுத்தப்பட்டு வரக் கூடிய தடுப்பூசிகள் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனாவை எதிர்த்து போராடுவதில் நல்ல செயல்திறன் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுவரை 45 சதவீதம் பேருக்கு மட்டுமே அமெரிக்காவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…