கொரோனா மருத்துவமனையில் முதியவரை கட்டியணைத்து அழுத மருத்துவர்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Default Image

அமெரிக்காவில் வாஷிங்டனில் சேர்ந்த டாக்டர் ஜோசப் வரோன், டெக்சாஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வரும்  நிலையில்,முதியவர் ஒருவரை கட்டியணைத்து அழும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரஸ் பரவத் தொடங்கி ஒரு வருடம் கடந்துவிட்டது. இதுவரையிலும் இந்த கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால் பொது மக்கள் முக கவசம் சானிடைசர் பயன்படுத்துவது போன்றவற்றை தங்களது அன்றாட வாழ்க்கையில்  நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் வாஷிங்டனில் சேர்ந்த டாக்டர் ஜோசப் வரோன், டெக்சாஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார். இவர் 252 நாட்களாக தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார. இவர் எத்தனையோ நோயாளிகளை பார்த்த நிலையில், முதியவர் ஒருவரின் கண்ணீருக்கு பதில் சொல்ல முடியாமல் கலங்கிய புகைப்படம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், நான் மருத்துவமனை ஐசியுவிற்கு சென்றேன். அங்கே ஒரு முதியவர் படுக்கையிலிருந்து இறங்கி அறையை விட்டு வெளியேற முயற்சித்தார். அவர் அழுது கொண்டிருந்தார். அவரின் அருகில் சென்று ஏன் அழுகிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர் நான் மனைவியிடம் செல்லவேண்டும். அவர் கையைப் பற்றிக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

நான் மிகவும் வருத்தப்பட்டேன். நானும் அவரைப் போல தான், அவரை நான் கட்டியணைத்து ஆசுவாசப்படுத்தினேன். அவருக்கு ஆறுதல் கிடைத்திருக்கும். அவர் அதன்பின் அவர் அருகே நிறுத்தினார் நான் ஏன் அவ்வளவு துயருற்றேன் என்று தெரியவில்லை. எங்கள் செவிலியர்களும் கண்ணீர் விட்டு அழுதனர். நீங்களே யோசித்துப் பாருங்கள் நீங்கள் ஒரு அறைக்குள்ளேயே இருக்கிறீர்கள் உங்களை தேடி வரும் மனிதரும் கவச உடை அணிந்து வருபவர் மட்டுமே, எப்படி இருக்கும் அதுவும் வயதானவர்களுக்கு இன்னும் மனவருத்தத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஆனால்  இன்று பலர் கொரோனா சூழலை கருத்தில் கொள்ளாமல், மாஸ்க் அணியாமலும் தனிமனித இடைவெளியை மறந்தும் வெளியில் சுற்றிக் திரிகிறார்கள். அவர்கள் அப்படி இருந்தால், ஐசியூ அறைக்குள்  அடைபட நேரிடும் என்றும், மக்கள் அனைவரும் சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான், என்னைப் போன்ற மருத்துவர்களும், செவிலியர்களும் ஓய்வெடுக்க முடியும் என  வருத்தத்துடன்  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்