அமெரிக்கா:ஜனவரி 19 முதல் இலவச கொரோனா சோதனை கருவிகளை ஆர்டர் செய்து கொள்ளலாம் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பலமடங்கில் வேகமாக அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,கடந்த ஒரே நாளில் 7,83,206 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்,ஒரே நாளில் 2099 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும்,அமெரிக்க மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் 500 மில்லியன் இலவச கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் டெஸ்ட் கிட் வழங்கப்படும் என்றும்,இதனை ஆர்டர் செய்வதற்கான இணையதளம் தொடங்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,அமெரிக்க மக்கள் இலவச கொரோனா பரிசோதனையை வீட்டிலிருந்து செய்ய வசதியாக டெஸ்ட் கிட்டை பெற்று கொள்ள,வரும் 19 ஆம் தேதி முதல் https://www.covidtests.gov/ என்ற இணையதளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும்,இந்த இணையதள பக்கத்தில் பெயர் மற்றும் முகவரி ஆகிய இரண்டை மட்டுமே குறிப்பிட்டு, டெஸ்ட் கிட் ஆர்டரை பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.எனினும்,ஒரு முகவரிக்கு 4 டெஸ்ட் கிட்கள் மட்டுமே தரப்படும் என்றும்,ஆர்டர் செய்த 7 முதல் 12 நாட்களுக்குள் தபால் சேவை மூலம் இவை அனுப்பி வைக்கப்படும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…