கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த நாட்களில் ராமானந்த் சாகர் இயக்கிய ராமாயணத் தொடர் மற்றும் பி.ஆர். சோப்ரா இயக்கிய மகாபாரதத் தொடர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என்று மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் மக்களிடையே பிரபலமான பழைய தொலைக்காட்சி தொடர்களை மீண்டும் ஒளிபரப்ப தூர்தர்ஷன் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளது. முகேஷ் கன்னா நடித்த பிரபலமான சக்திமான் சீரியலை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் டிடி நேஷனல் நெட்வொர்க்கில் பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல் சாணக்யா, உபநிஷத் கங்கா, ஸ்ரீமன் ஸ்ரீமதி, கிருஷ்ணா காளி ஆகிய பிரபலமான தொடர்களும் டிடி நேஷனல் நெட்வொர்க்கில் நாளை முதல் ஒளிபரப்பப்பட உள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…