உலகளாவிய பொருளாதார மீட்பு எப்படி இருக்கும் என உறுதியாக கூற முடியாது – சர்வதேச நிதியத்தின் ஆராய்ச்சி இயக்குனர் கீதா கோபிநாத்

உலகளாவிய பொருளாதார மீட்பு எப்படி இருக்கும் என உறுதியாக கூற முடியாது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை உலக அளவில் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த கொரோனா தொற்றுக்கு பின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனையடுத்து, சர்வதேச நிதியத்தின் ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் கீதா கோபிநாத் அவர்கள் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்பான உலகளாவிய பொருளாதார மீட்பு எப்படி இருக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது.
தற்போதைய மீட்பு நிலை, நாங்கள் விரும்பியதை விட பலவீனமாகவே இருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் பயணங்களுக்கு வரவேற்பு இல்லாததால், பொருளாதாரத்தை மீட்க 2 ஆண்டு ஆகும்.’ என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025