தலைவி படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார் .
விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் தயாரிப்பில் உருவாகும் ‘தலைவி’ திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் .மேலும் இந்த திரைப்படத்துக்கு பாகுபலி பட கதாசிரியரான கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பல முக்கிய பிரபலங்கள் நடிக்கும் இந்தப் படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்கான டிரைலர் கடந்த மாதம் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்ததாக படக்குழுவினர் படத்தின் முதல் பாடலை நாளை வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். இந்த பாடலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் மனைவி சைந்தவி பாடியுள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…