தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களில் முதலிடத்தை பிடித்த சூப்பர் ஸ்டார்.!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் டுவிட்டர் பக்கத்தை 10மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘SarkaruVaariPaata’ இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மேலும் இவர் தான் சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் அதிக ரசிகர்களை வைத்திருப்பவர். அந்த வகையில் தற்போது மகேஷ் பாபுவை டுவிட்டர் பக்கத்தில் பின் தொடர்பவர் களின் எண்ணிக்கை 10 மில்லியனை பெற்றுள்ளது. தென்னிந்தியா சினிமா நட்சத்திரங்களில் 10 மில்லியன் ஃபாலோவேர்ஸை பெற்று முதலிடத்தில் மகேஷ் பாபு உள்ளார். தற்போது இதனை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் #10MillionStrong மற்றும் #10MillionMAHESIANS என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.
10 MILLION thanks can never sum up the immense gratitude I have! Truly happy to be virtually connected with all of you… Much love???? #10MillionStrong pic.twitter.com/xIA8Oa7zdk
— Mahesh Babu (@urstrulyMahesh) July 3, 2020