,

மரியாதை எதிர்ப்பார்ப்பவருக்கு மற்றுள்ளவர்களுக்கு மரியாதை கொடுக்க தெரியவில்லை.! பாலாஜியை குற்றம்சாட்டிய சோம் நண்பர்கள்.!

By

மரியாதை எதிர்ப்பார்ப்பவருக்கு மற்றுள்ளவர்களுக்கு மரியாதை கொடுக்க தெரியவில்லை என்று பாலாஜியை சோம் நண்பர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள சோம் சேகர் மார்ஷியல் தற்காப்பு கலையை பயின்றவர் .  ஆனால் அதனை வீட்டினுள் காண்பிக்காமல் சமாதான புறாவாக சென்று கொண்டிருக்கிறார் . கடந்த வாரம் முதல் போட்டிக்குள் இறங்கி ஆட தொடங்கி உள்ளார் .அதில் வீட்டு தலைவருக்கான டாஸ்க்கில் சோம் தனியாக 200 பந்துகளை எடுத்தார் .  ஆனால் அங்கு பாலாஜி செய்து தந்திரத்தால் சம்யுக்தாவிற்கு கேப்டன்ஷிப் சென்றது . அதே போன்று நீதிமன்ற மேடை டாஸ்க்கில் பாலாஜிக்கு எதிராக நின்று வெற்றி பெற்றார் .

இந்த நிலையில் சோம் குறித்தும், மற்ற போட்டியாளர்கள் குறித்தும் சோம் அவர்களின் நண்பர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் சம்யுக்தா மீது எங்களுக்கு காண்டாக உள்ளது .  அவரவர் விளையாட்டை அவரவர் விளையாடாமல் பாலாஜியுடன் இணைந்து விளையாடி தலைவராகியுள்ளார் .சோம் மட்டுமே 200 பந்துகளை சேகரித்தார் . ஆனால் பாலாஜி மற்றும் சம்யுக்தா இணைந்து 260 பந்துகளை மட்டுமே சேகரிக்க முடிந்தது .முறைகேடாக விளையாடி வெற்றி வெற்றி பெற்றார் சம்யுக்தா என்று கூறியுள்ளனர் .

மேலும் அவர்கள் பாலாஜி குறித்து கூறிய போது , தனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும், அவன் இவன் என்று அழைக்க கூடாது என்றும் கூறிய பாலாஜி மற்ற போட்டியாளர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றும் , தனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பாலாஜிக்கு மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற இங்கிதம் தெரியவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளனர் . மேலும் சோம் குறித்து கூறிய அவரது நண்பர்கள், மார்ஷியல் தற்காப்பு கலையை பயின்றவர் என்றாலும் அவர் அடிதடியை விரும்பாதவர் என்று கூறியுள்ளனர் .

Dinasuvadu Media @2023