இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் புதிய படம் தான் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனும் உள்பட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் என இரண்டும் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைத்தளத்தில் பல்வேறு சாதனைகளை படைத்தது.
இந்நிலையில், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பித்து டெல்லி சென்று படப்பிடிப்பை நடத்திவிட்டு, பின்னர் கர்நாடகாவில் ஷிமோகா என்ற இடத்தில சில முக்கிய காட்சிகளை படமாக்கியது. அதனை தொடர்ந்து சென்னை திரும்பிய படக்குழு ராயபுரம், வியாசர்பாடியில் என பல முக்கிய பகுதியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதால், சென்னையில் முடிவடையும் வேளையில் அடுத்தகட்டமாக படக்குழு நெய்வேலி சென்று கிளைமேக்ஸ் காட்சிகளை எடுக்கவுள்ளது.
இதனிடையே, தளபதி ரசிகர்களுக்கு தற்போது குஷி படுத்தம் வகையில் புதிய அப்டேட் ஒன்று வெளியிட்டுள்ளது. அதவாது நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அப்டேட்டை வைரலாக்கி வருகிறார்கள். மேலும் நாளை வெளியாகும் போஸ்டரில் விஜய் சேதுபதி மற்றும் விஜய் இருவரின் லுக் வெளியாகும் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள். என்னினும் எந்த லூக்கா இருந்தாலும் அதில் தளபதி இருந்த போதும் அதை உலகளவில் வைரலாகிருவார்கள் . அதனால் நாளை முழுவதும் சமுக வலைத்தளம் தளபதி ரசிகர்கள் கையில் தான் இருக்கும்.
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…