நடிகர் சிவகார்த்திகயேன் தற்பொழுது டாக்டர் மற்றும் அயலான் என்று இரண்டு படங்கள் நடித்து வருகிறார், மேலும் உலகம் உலகம் முழுவதும் பரவி வரும் கொரனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே 3 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோவையும், உயிரை பணயம் வைத்து வேலை செய்பவர்களுக்கு நன்றியை தெரிவித்து வீடியோவையும், தங்கள் கருத்துக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் அவர் கூறியது இன்னும் கொஞ்சம் நாட்கள் நாம் இந்த விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்தாலே விரைவில் இந்த சூழ்நிலையிலிருந்து வெளிவரலாம் என்று நம்புகிறேன். மேலும் அனைவரும் வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.
மேலும் முக்கியமாக பெரியவர்கள் மற்றும் குழந்தைகளையும் பாதுகாப்பாக பார்த்து கொள்ளுங்கள். நமக்காக வெளியில் கஷ்டப்பட்டு பணியாற்றும் அரசாங்கம், தூய்மை பணியாளர்கள்,செவிலியர்கள் , மருத்துவமனை ஊழியர்கள், அதிகாரிகள், அரசு அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறையினர், பத்திரிக்கை ஊடகத்துறை நண்பர்கள் இவர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகள் .
மேலும் இந்த நிலையில் இவர்களுடன் சேர்த்து இன்னொருவருக்கு நன்றியை சொல்வதற்கு தான் இந்த வீடியோ. அவர்களுடைய உயிர் அவர்களுடைய வாழ்க்கை, அவர்களது குடும்பம் எதையும் யோசிக்காமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த வெளியில் வந்து அவர்கள் சேவையை செய்யும் மனித கடவுள்கள் டாக்டர்கள் அவர்களுக்கு பெரிய மிகவும் நன்றி மற்றும் சல்யூட் என்று கூறியள்ளார் இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…