இப்பிடி நம்ப வச்சி ஏமாத்திட்டீங்களே! சோகத்தில் விஜய் சேதுபதி ரசிகர்கள்!

- மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்.
- சோகத்தில் விஜய் சேதுபதி ரசிகர்கள்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் விஜயுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிப்பதால், விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்து அறிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் 2019-ம் ஆண்டின் இறுதியில் டிசம்பர் 31-ம் தேதியன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் விஜய் மட்டுமே இடம்பெற்றிருந்தார்.
இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான செகண்ட் லுக் போஸ்டரிலும் கருப்புநிற உடையில் நடிகர் விஜய் சைலென்ஸ் சொல்லும் விதமாக தோன்றியிருந்தார். இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும், விஜய் சேதுபதி ரசிகர்கள் எங்களை ஏமாத்திட்டிங்களே என்று சோகமான பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர்.
#MasterSecondLook pic.twitter.com/XRd0ETSnyf
— Jagadish (@Jagadishbliss) January 15, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025