அமெரிக்காவில் சீன செயலியான டிக்டாக் செயல்பட அனுமதியளிக்கும் புதிய ஒப்பந்ததிற்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப் ஆதரவளித்துள்ள நிலையில், அந்நாட்டில் டிக்டாக் செயலிக்கு அனுமதியளித்துள்ளார்.
இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவும் டிக் டாக் உட்பட சீன செயலிகளை தடை செய்வதற்காக ஆலோசனையை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறினார்.
இந்நிலையில், டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்ய நிறைவேற்றப்பட்ட ஆணையில் கையெழுத்திடுவதாக அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் தெரிவித்துள்ளார். மேலும், டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு இம்மாதம் 15 ஆம் தேதிக்குள் விற்காவிட்டால், அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
டிக்டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்க முன்வந்த நிலையில், டிக்டாக் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனம், அதனை மறுத்துள்ளது. மேலும், டிக்டாக்கை மற்றொரு அமெரிக்க நிறுவனமான ஆரக்கல் நிறுவனம், டிக்டாக் செயலியை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், டிக்டாக் செயல்பாட்டை நிர்வகிக்க ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனம் இணைந்து புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவித்த அவர், அதற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், டிக்டாக் நிறுவனம், அமெரிக்க கட்டுப்பாட்டில் இயங்குமெனவும், பயனர்களின் தகவல் பாதுகாப்பாக இருக்குமெனவும் டிக்டாக் செயலி செயல்பட அனுமதியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…