மதுக்கடைகளில் யார் வரிசையில் இருக்கிறார்கள் என்று பாருங்கள்.? பிரபல இயக்குனர் ட்வீட்

Default Image

மதுக்கடைகளில் யார் வரிசையில் இருக்கிறார்கள் என்று பாருங்கள் என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்வீட் செய்துள்ளார். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் சமூக இடைவெளியை பின்பற்றி சில அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் டாஸ்மாக் கடைகளையும் திறக்கப்படுமோ என்ற அச்சம் பலரிடமும் இருந்து வந்தது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில்  நேற்றைய தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பயமின்றி சமூக விலகலை கடைப்பிடிக்காமல் மது வாங்க வரிசையில் நின்று முண்டியடித்தனர் . இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக எல்லைகளில் உள்ள மக்களில் சிலர்  அண்டை மாநிலங்களில் சென்று கூட்ட கூட்டமாக  மதுபாட்டில்கள் வாங்கியதால் சமூக விலகல் காற்றில் பறந்தது.

மேலும் இதனால் தற்போது தமிழக அரசு சில நிபந்தனைகளுடன் கூடிய மே 7முதல் டாஸ்மாக் கடைகளை தமிழகத்தில் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த உத்தரவை பலர் கண்டித்தும், பலர் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர். 

இந்த நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு மதுபான கடையில் பெண்கள் மதுபாட்டில்கள் வாங்க வரிசையாக நின்றது போன்ற வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனை சுட்டி காட்டி தெலுங்கு பட இயக்குநரான ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில், மதுபான கடைகளின்  முன்பு யார் நிற்கிறார்கள் என்று பாருங்கள். குடிகார ஆண்களிடமிருந்து பெண்களை காப்பாற்றி கொள்வதற்காக இவ்வளவு என்று பதிவு செய்துள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆம் பெண்களை இழிவாக பேசியதாக கூறி பலர் இந்த டுவீட்டுக்கு கமென்ட் செய்து வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்