அருண் ஜெட்லி பிறந்த தினம் இன்று..!

இன்று இந்திய அரசியல்வாதியான அருண் ஜெட்லி பிறந்த தினம்.
அருண் ஜெட்லி டிசம்பர் 28, 1952 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் மகராசு கிசன் ஜெட்லி, இரத்தன் பிரபா ஜெட்லி. இவர் பொருளியல் இளங்கலை பட்டதை படித்து முடித்துள்ளார். இதன் பிறகு புது டில்லியில் சட்டபடிப்பை முடித்துள்ளார். இவர் படிக்கும் போதே கல்விசார்ந்த மற்றும் கல்வி சாராத செயற்பாடுகளுக்காக பாராட்டுக்களை பெற்றவர்.
இவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். மேலும், இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் ஆவார். இவர் பதினாறாவது மக்களவை அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சிறுநீரக கோளாறு காரணமாக 2019, ஆகஸ்ட் 24 அன்று காலமானார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!
July 26, 2025
2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.!
July 26, 2025