விடுதலை போராட்ட வீரர் சத்திய மூர்த்தி அவர்களின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.
1887 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயத்தில் பிறந்தவர் தான் சத்தியமூர்த்தி. சென்னையில் உள்ள ஒரு கிறிஸ்தவ கல்லூரியில் பட்டம் பெற்ற பின்பதாக, இவர் சட்டம் பயின்று உள்ளார். சிறந்த பேச்சு திறன் காரணமாக காங்கிரசின் பிரதிநிதியாக இங்கிலாந்து அனுப்பப்பட்ட இவர் அங்கும் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தி உள்ளார். பின் 1930 ஆம் ஆண்டு பார்த்தசாரதி கோவிலில் இந்தியக் கொடி ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சைமன், கமிஷன் எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், சுதேசி இயக்கம், சத்தியாகிரகம் ஆகியவற்றிலும் இவரது பங்கு பெருமளவில் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 1942 ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்த காரணத்தால் கைது செய்யப்பட்டு நாக்பூரில் உள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்நேரம் ஏற்பட்ட முதுகுத்தண்டு காயம் காரணமாக மார்ச் 28-ஆம் தேதி 1943 ஆம் ஆண்டு சென்னை பொது மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இவரது பணியை பாராட்டி தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு சத்தியமூர்த்தி பவன் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இவர் தீரர், சொல்லின் செல்வர், நாவரசர் எனவும் புகழப்பட்டுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் கூட சிறந்த சொல்லாற்றல் பெற்றவராக விளங்கி இருந்துள்ளார். இத்தனை பெருமைகள் கொண்ட சத்திய மூர்த்தி அவர்களின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…