இந்திய நூலக அறிவியலின் தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த தினம் இன்று…!

Published by
Rebekal

இந்திய கணிதவியலாளரும், நூலக அறிவியலின் தந்தையுமாகிய எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

1892 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வேதாந்தபுரம் எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் எஸ்.ஆர்.ரங்கநாதன். இவர் ராமமிருதம் மற்றும் சீதாலட்சுமி தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்து உள்ளார். ராமாமிருதம் ராமாயண கதையை கூறுவதில் பெரும்புகழ் பெற்றவராகவும், சுற்றத்தார் புகழும் வகையிலும் இருந்துள்ளார். ஆனால் ராமாமிருதம் தனது 30-வது வயதில் திடீரென காலமாகிவிட்டார். எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் ஆறு வயதிலேயே அவரது தந்தை ராமாமிருதம் மரணமடைந்த நிலையில், தனது பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் வளர்ந்து உள்ளார்.

அதன்பின் தனது 15 வயதிலேயே ருக்மணி எனும் பெண்ணை எஸ்.ஆர் ரங்கநாதன் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் குளத்தில் குளிக்கும் பொழுது ஏற்பட்ட விபத்து காரணமாக இவரது மனைவி இறந்துவிடவே, அதன் பின்பு இவர் இரண்டாவது முறையாக சாரதா எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளது. அதன் பின் 1924 இல் சென்னைப் பல்கலைக்கழக நூலகராக  நியமிக்கப்பட்ட இவர், பிறகு லண்டன் சென்று அங்குள்ள சிறந்த நூலகராகிய டபிள்யூ.சி.பி.சேயர்ஸிடம்நூல்களை வகைப்படுத்தும் கோட்பாட்டை பயின்றுள்ளார்.

அதன்பின் நூலகம் அறிவுசார் பிரிவினரை ஒன்றிணைத்து, சென்னை நூலகச் சங்கத்தை நிறுவியுள்ளார். 60க்கும் மேற்பட்ட நூல்கள், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். 21 ஆண்டுகளுக்கு மேல் நூலகத் துறையில் தீவிரமாக செயல்பட்டு பல புரட்சிகளை கொண்டு வந்த இவர், 1945-இல் நூலகத்துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். பின் நூலக அறிவியல் பட்டப் படிப்பை அறிமுகம் செய்து, தானே பலருக்கு கற்பித்து வந்துள்ளார்.

எனவே இந்திய நூலக சங்க தலைவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பின் இவருக்கு டெல்லி பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. மேலும், இவர் பத்ஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். இந்திய அறிவியல் துறையின் தந்தை எனப் போற்றப்படும் கூடிய எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்கள் தனது 80 வயதில் 1972 இல் மறைந்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

1 minute ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

4 minutes ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

28 minutes ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

1 hour ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

2 hours ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

3 hours ago