ஷங்கர் – ராம்சரண் கூட்டணியில் இணையும் அஞ்சலி.?

ஷங்கர் – ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படத்தில் அஞ்சலி நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான ராம் சரணின் 15 வது திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் ராம்சரனுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.
முழுக்க அரசியல் பின்னணியில் இந்தப் படம் உருவாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் நடிகை அஞ்சலி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் ஏன்னு எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025