நடிகர் அக்சய குமார் தனது மனைவிக்கு வெங்காய காதணியை பரிசளித்தார்.இது சமூகவலையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
அதற்கு காரணம் இந்த சமயத்தில் தான் நாட்டில் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு எகிரி வருகிறது. மேலும் நாட்டில் வெங்காய பற்றாக்குறையும் ஏற்பட்ட நிலையில் விலையை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைக்கு இடையில் தான் இந்த பரிசளிப்பு ஆனது நிகழ்ந்தது.
வெங்காய விலை உயர்வை விமர்சித்து மீம்ஸ் கிரியேட்டர்கள் உருவாக்கிய மீம்ஸ்க்களை விட அக்சய குமாரின் வெங்காய காதணி அல்டிமேட் என்று சமூகவலையத்தளவாசிகள் சலசலத்து வந்த நிலையில் அக்சய குமாரின் மனைவியும் நடிகையுமான ட்விங்கிள் கன்னா தனது இண்ஸ்டாகிராமில் வெங்காய காதணியை பதிவிட்டு அது பரபரப்பான காதணியானது.
இந்நிலையில் தற்போது அதே காதணியை பற்றி மீண்டும் தனது இண்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். என் கணவர் அளித்த பரிசு அது மிகவும் சிறந்த பரிசு அது தற்போது துளிர் விட ஆரம்பித்துள்ளது என்று பதிவிட்டு மேலும் அவர் வெங்காய காதணியோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பதிட்டு உள்ளார்.
அவருடைய இந்த பதிவிற்கு ரசிகர் ஒருவர் பதில் அளித்து பதிவிட்டு உள்ளார் அதில் மேடம் வெங்காயத்தின் விலை ரூ.200 காதுகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.மேலும் ஒரு ரசிகர் அது உங்கள் காதுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறியுள்ளார்.,மற்றொரும் ஒரு ரசிகர் ஹ ஹ ஹ விலைமதிப்பற்ற ட்விங்கிள் ஜி என்று கூறியுள்ளார்.ட்விங்கிள் கன்னாவும் பதிவும் ரசிகர்களின் பதிலும் சமூகவலைதளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…