விஷால் நடிக்கும் இரண்டு அதிரடி புதிய படங்கள்..??

விஷால் அடுத்ததாக இரண்டு அதிரடி ஆக்க்ஷன் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக எனிமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் ஆர்யாவும் முக்கியமான கதா பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சரவணன் இயக்கத்தில் தனது 31 வது படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த திரைப்படம் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த ஆக்சன் படம் என்று கூறப்படுகிறது.
அதைபோல் அடுத்ததாக நடிகர் விஷால் அடங்கமறு திரைப்படத்தின் இயக்குனரான கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஒரு அதிரடியான ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பொல்லாதவன் ஆடுகள் படத்தை தயாரித்த கதிரேசன் தயாரிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இரண்டு ஆக்சன் படங்களில் விஷால் நடிப்பதால் அவரது ரசிகர்கள் ஆவலுடன் படத்திற்கான எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025