பாஜக மாநில தலைவர் எல்.முருகனுக்கு வைக்கப்பட்ட பேனர் கிழிப்பு...!

In Dharapuram, a banner was torn down for BJP state president L. Murugan. Concentration of police.

தாராபுரத்தில், பாஜக மாநில தலைவர் எல்.முருகனுக்கு வைக்கப்பட்ட பேனர் கிழிப்பு. போலீசார் குவிப்பு.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில், எல்.முருகன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கயல்விழியை விட 1,393 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார்.

unknown node

இதனை அடுத்து, அவருக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் அண்ணா சிலை அருகே பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அந்த பேனருக்கு அருகே  திமுகவினரும் நன்றி தெரிவித்து பேனர் வைத்துள்ளனர். இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் முருகனுக்காக வைக்கப்பட்ட பேனரை கிழித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவியதால், காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.