இந்தியா , சீனாவை தவிர மற்ற நாடுகள் பொருளாதார மந்தநிலைக்குச் செல்லும் ஐ.நா கணிப்பு .!

உலக முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,092 ஆக அதிகரித்துள்ளது. பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,89,240 ஐ எட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பிய நாடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சி செய்து வருகிறது.இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .இதன் காரணமாக மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு உலகம் பொருளாதார மந்த நிலையை சந்திக்கும் என ஐ.நா. வர்த்தக மற்றும் மேம்பாட்டு மாநாடு அமைப்பு கூறியுள்ளது.”உலக பொருளாதாரம் இந்த ஆண்டு மந்தநிலைக்குச் செல்லும் என்றும் இதனால் டிரில்லியன் கணக்கான டாலர்களில் வருமானத்தை உலக நாடுகள் இழக்கும்” என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார மந்தநிலை வளரும் நாடுகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். சீனா, இந்தியாவைத் தவிர்த்து மற்ற நாடுகள் மந்தநிலையை சந்திக்கும் என கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025