சீனா சிறிய அளவு அணுசக்தி சோதனை நடத்தியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு ,சீனா மறுப்பு

சீனா சிறிய அளவு அணுசக்தி சோதனையை நடத்தி உள்ளது என்று அமெரிக்கா கூறியதற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் உருவாகியது.இதன் பின்னர் இது உலகில் உள்ள பல நாடுகளில் பரவியது. ஆனால் அமெரிக்காவே இந்த வைரஸ் பரவ சீனா தான் என்று கூறிவந்தது.இது அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
இதற்குஇடையில்தான் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில்,சீனா சிறிய அளவு அணுசக்தி சோதனையை ரகசியமாக நடத்தி இருப்பதாக தெரிவித்தது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.இது குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில்,சீனா அணுசக்தி சோதனைகள் தொடர்பான தடைக்கு உறுதிகொண்டுள்ளது . அமெரிக்கா தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.இது ஆதாரமற்றது என்று கூறினார்.