மலையாள திரையுலகில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய நடிகர் விஜய் பாபு மீது இளம்பெண் ஒருவர் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் தெற்கு போலீசில் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ள நடிகர் விஜய் பாபு பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பென் எனும் படத்திற்க்காக கேரளா மாநிலத்தின் திரைப்பட விருதையும் வென்றுள்ளார். ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் விஜய் பாபு நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி விஜய் பாபு மீது இளம்பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய விஜய்பாபு தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி அவர் இது போன்று தவறாக நடந்து கொண்டதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விஜய் பாபு மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பேஸ்புக் லைவில் கூறியதற்காக மேலும் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய் பாபு மலையாள திரைப்பட கலைஞர்கள் செயற்குழு சங்கத்திலிருந்து விலகியுள்ளார்.
இது குறித்து கூறியுள்ள விஜய் பாபு, தன்னால் நடிகர் சங்கத்திற்கு அவப்பெயர் வராமல் இருப்பதற்காக இச்சங்கத்திலிருந்து விலகியுள்ளதாகவும், தான் நிரபராதி என்பதை நிரூபிக்கும் வரை நடிகர் சங்கத்தில் இணையப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் : திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.முன்னதாக, திருவாரூர்…
மதுரை : மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் பூபாலன், தனது மனைவிக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும்,…
லண்டன் : நாட்டின் ஜனநாயக அமைப்பை பெரிய அளவில் மாற்றியமைக்கும் வகையில், அனைத்து இங்கிலாந்து தேர்தல்களிலும் 16 மற்றும் 17…
மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி,…
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…
சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…