விஜயின் பிகில் 20 நஷ்டமா..? தயாரிப்பாளர் ட்வீட்.!
பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பிகில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார், பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்தது, மேலும் விஜய்க்கு மாபெரும் வெற்றி கொடுத்து கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பட்டத்தையும் பெற்றது.
இந்த நிலையில் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததகா விஜய் யாருடன் இணையப்போகிறார் என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளார்கள், தற்பொழுது இணையத்தளத்தில் பிகில் திரைப்படம் தயாரிப்பு நிறுவனத்திற்கு 20 கோடி நஷ்டம் என்று செய்திகள் வெளியானது, இதற்கு பதிலளிக்கும் வைகையில், பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
Yes. @republic please fact check this article. Thank you ???? https://t.co/BROY0EtSXt
— Archana Kalpathi (@archanakalpathi) May 28, 2020